தொழுகை போன்று ஸகாத்தும் சமுகத்தில் முக்கியப்படுத்தப்பட வேண்டும் -அஷ்ஸெய்க் M.T.M றிஸ்வி
தொழுகைக்கு எமது சமுகத்தில் அளிக்கப்படும் உயர்வான முக்கியத்துவத்தை போன்று ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஸகாத்திற்கும் உரிய இடம் வழங்குவதோடு ஸகாத்தை கூட்டாக நிறைவேற்றவும் அவ்வாறான கூட்டு முயற்சியை நிறுவன மயப்படுத்தி சிறப்பாக நடாத்தி செல்லவும் வேண்டும் எனவும் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் துறைத்தலைவர் M.T.M றிஸ்வி (மஜீதி) அன்மையில் சாய்ந்தமருதில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்
Social roots -Srilanka சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 21.5.2017 சாய்ந்தமருது சீ -பிறீஸ் உணவகத்தில் இடம்பெற்ற
அம்பாரை மாவட்டத்திலுள்ள ஸகாத் சபைகளுக்கான ஸகாத் அபிவிருத்தி செயலம்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இக்கருத்தை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை தலைவர் S.H ஆதம்பாவா (மதனி) அவர்களும் ஸகாத் சபைகளின் செயற்பாடுகளை முன்னேற்ற அறிவுரைகளை வழங்கியதோடு ஸகாத் சபைகளினால் ஸகாத் அறவிடுதல் பங்கிடுதலில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பான அனுபவ பகிர்வுகளும் இடம்பெற்றன.
இந்நிழ்வில் பின்வரும் விடயங்களும் கலந்துரையாடப்பட்டன
-மனம் விரும்பும் தொகையை ஸகாத் ஆக வழங்காமல் உரியவாறு கணக்கிட்டு வழங்க ஊக்குவிப்பது
-ஸகாத் அளவு சம்பந்தமான சந்தேகங்களுக்கு ஐம்மியத்துல் உலமா சபையின் விசேட தொலைபேசி இலக்கமான 0117490420
ற்கு அழைத்தல்
-ஸகாத் நிர்வாகிகள் கடந்த வருட ஸகாத்தை விட இவ்வருடம் கூடுதலான அளவு ஸகாத் சேகரிப்பை இலக்காக கொன்டு செயற்படல்
-ஸகாத் நிதியங்களை நிறுவன ரீதியாக செயற்பாடு கூடியதாக்குதல்.