பணம் பறிக்கும் அந்த மின்னஞ்சல் உங்களுக்கும் வருகிறதா?
இணையத்தை பயன்படுத்தி ஏமாற்று திட்டத்தில் பணம் பறிக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளதென இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பணம் பறிக்கப்பட்டமை குறித்து கடந்த சில நாட்களாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென அந்தப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் சந்ரகுப்த தெரிவித்தார்.
அதிஷ்ட சீட்டிலுப்பில் வெற்றிபெற்றுள்ளீர்கள் என மின்னஞ்சல் மற்றும் கையடக்கத் தொலைபேசி மூலம் தகவல் வழங்கி சிலர் பணம் பறித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ADN